உலக சாக்லெட் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கலைக்கட்டிய சாக்லெட் விற்பனை

நீலகிரி: உலக சாக்லெட் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஹோம் மேட் சாக்லெட் தொழில் விற்பனை கலைக்கட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக சாக்லெட் தினம் 2009-ம் ஆண்டு முதல் ஜூலை 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் ஒன்றான சாக்லெட் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதிக கோக்கோ நிறைந்த சாக்லெட்டுகள் உடலுக்கு மிகவும் நல்லது என்றும் சாக்லெட்டுகளின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியைத்தரக்கூடியதாக இருக்கிறது என்றும் சாக்லெட் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் சாக்லெட் விற்பனை சூடுபிடித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: