ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி திங்கள் கிழமை அன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஒரகடத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்படுகின்றது. இம்முகாமில், தகுதியுடை ஐடிஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை, 044 - 2989 4560 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிலயாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: