திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.31.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி நீதிமன்றம் அருகே பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றது. இதையடுத்து நேற்று மாலை போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, ஊழியர்கள் அனைவரையும் உள்ளேயே இருக்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், உதவி பொறியாளர் கந்தசாமி அறையில் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.31.26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையின்போது, இந்த பணம் நடந்த பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வைத்திருந்ததாக கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து அலுவலக கணக்குகளை சரிபார்த்தனர். திருவானைக்காவலில் உள்ள கந்தசாமி வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: