கோவில் குடமுழுக்கு விழாவில் எல்லா மதத்தினரும் பங்கேற்கலாம்.. வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவை குறிப்பிட்டு நீதிபதிகள் அதிரடி!!

மதுரை : நம்பிக்கையுள்ளோர் கோவிலுக்கு வரும் போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில்,  கன்னியாகுமரி ஆதிகேசவ பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் வர தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை.

120 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில், நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும் போது, அவர்களை நிறுத்தி மதத்தினை உறுதி செய்வது பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பாடகர் யேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், ஏராளமான இந்து பாடல்க்ளை பாடியுள்ளார்.வேளாங்கண்ணி தேவாலயத்திலும், நாகூர் தர்காவிலும் ஏராளமான இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர்.ஆகவே கோவிலுக்கு வேறு மதத்தை செல்வதை குறுகிய பார்வையில் நீதிமன்றம் அணுக விரும்பவில்லை. எனவே குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் வர தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம். கோவிலில் வேறு மதத்தினர் வழிபாடு செய்வதை குறுகிய பார்வையில் அணுகாமல் பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும்,என்று தெரிவித்தனர்.

Related Stories: