காலியாக உள்ள தற்காலிக சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி பி.சி.கல்யாண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் காலியாக உள்ள ஒருதற்காலிக சட்ட ஆலோசகர் பதவியை நிரப்ப விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இளநிலை பட்டப்படிப்புடன் பி.எல். முடித்திருக்கவேண்டும் அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்ப தாரருக்கு சர்விஸ், கிரிமினல் சம்பந்தமான நீதிமன்ற பணிகளில் குறைந்தது 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு மாதம் ரூ. 20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ஒப்பந்தம் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ரிட் பெட்டிஷன் மற்றும் ரிட் அப்பீல்களுக்கு எதிர் உறுதி ஆவணம் தயாரிக்க வேண்டும். கண்ட்டெம்ப்ட் பெட்டிஷன்களை கண்காணிக்க வேண்டும். மேலும் சட்ட பணிகளில் காவல் கண்காணிப்பாளருக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

விண்ணப்பங்களை  திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உரிய ஆவணங்களுடன் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதிக்குள் la2sptvlr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேர்காணலுக்கு நாள் மற்றும் நேரம் ஆகியவை விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: