122 அரசு துறைக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் வெளியீடு

சென்னை: 122 அரசு துறைகளுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சிதேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி 151 துறை தேர்வுகளை கடந்த 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னை மற்றும் டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தியது. இத்தேர்வின் கொள்குறி வகை சார்ந்த 122 தேர்வுகளின் உத்தேச விடைகள் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் வருகிற 5ம் தேதி தங்களுடைய மனுக்களை அனுப்பலாம்.

Related Stories: