அசாமில் வெடிபொருட்களுடன் ஊடுருவிய உல்பா தீவிரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொலை!!

டின்சுகியா:அசாமில் வெடிப்பொருட்களுடன் ஊடுருவிய உல்பா தீவிரவாதிகளில் ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உல்பா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) தீவிரவாத அமைப்புக்கும் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே இன்று அதிகாலை திடீர் மோதல் ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் இணைந்து நடத்திய பதிலடி தாக்குதலில் உல்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதுகுறித்து டின்சுகியா எஸ்பி டெபோஜித் தியோரி கூறுகையில், ‘வெடிமருந்துகளுடன் 6 உல்பா தீவிரவாதிகள் ஊடுருவியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த என்கவுன்டர் சம்பவத்தில் உல்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது’ என்றார்.

Related Stories: