இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன.. அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை அவசியம் : அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: இந்தியாவில் மதரீதியாக நடைபெறும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். சர்வதேச மத சுதந்திர மாநாட்டில் உரையாற்றிய அவர், இந்தியாவில் உள்ள ஏராளமான மத குழுக்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்வதாக கூறியுள்ளார். இந்தியாவில் குடியிரிமைச் சட்டம், ஹிஜாப் தடை, வீடுகள் இடிப்பு என மன ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ரஷாத் உசேன் தெரிவித்துள்ளார். வங்கதேச இஸ்லாமியர்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை சுட்டிக் காட்டிய அமைச்சர் ஒருவர், முஸ்லீம்களை கடுமையாக விமர்சித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மனிதாபிமான செயல்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாகவும், இது தொடர்பான சவால்கள் குறித்த நேரடியாக இந்திய அதிகாரிகளுடன் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள அனைத்து மதத்தினரின் சுதந்திரத்தை காப்பது அவசியம் என்று ரஷாத் உசேன் குறிப்பிட்டுள்ளார். உதய்பூரில் டெய்லர் கொல்லப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்த அவர், இது போன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். தனது தந்தை 1969ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினாலும் இன்றும் தானும் அவரும் தன் குடும்பமும் இந்தியாவை மிகவும் நேசிப்பதாக உசேன் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதன் மதிப்புகள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.   

Related Stories: