காஞ்சிபுரம் அருகே குருபகவான் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பிரகஸ்பதி என்கிற குரு பகவான் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் பிரகஸ்பதி என்கிற குரு பகவான் கோயில் தனி சன்னதியாக நட்சத்திர விநாயகர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தாரை குரு பகவானின் இடது தொடையில் அமர்ந்து யானை வாகனத்தில் மீதேறி தம்பதி சமேதராய் அருள் பாலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, 2ம் கால யாக பூஜை, விசேஷ திரவ்யாஹூதி, யாத்ரா தானம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர், இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Stories: