வேலூர் அருகே கெங்கையம்மன் கோயிலில் வெள்ளிக்குடை, அம்மன் தாலி, பட்டுபுடவைகள் திருட்டு

வேலூர்: வேலூர் அருகே சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கத் தாலியும், 5 கிலோ வெள்ளிக்குடையும் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்திருக்கும் கெங்கையம்மன் கோயிலில் நேற்று இரவு 6 பூட்டுகளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அம்மன் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கத் தாலி மற்றும் 5 கிலோ வெள்ளிக்குடை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

மேலும் பீரோவில் இருந்த பட்டுபுடவைகளையும் அள்ளிச் சென்றனர். கோயிலைச் சுற்றி 16 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும் போலீசில் சிக்காமல் இருக்க, கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுக்கருவியை, ஹார்ட் டிஸ்கை கொள்ளையர்கள் கழற்றி எடுத்துச் சென்றுவிட்டனர். இன்று காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கோயில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜூன் 2ம் வாரத்தில் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. எனவே கோயிலில் உண்டியல் பணம் நிறைய இருக்கும் என்ற  எண்ணத்தில் பெரிய திட்டத்துடன் வந்த கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அம்மன் தாலியும், வெள்ளிக்குடையும், பட்டுப்புடவைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.      

Related Stories: