பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம்..உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் சான்றிதழ்களை பெற அதிகளவில் மாணவர்கள் வருவதால் தொற்று ஏற்படாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக மாஸ்க் அணிவது அவசியம் என மாநில அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இதை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், பள்ளிகளிலும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அனைத்து வகை பள்ளிகளுக்கும், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளவை பின்வருமாறு...

*மாணவர்கள் ,ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

*தனி மனித இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்

*அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

*பள்ளி வளாகத்தில் வெப்ப பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை நடத்திய பின்னரே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும்.

*வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

Related Stories: