பரங்கிமலை ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தும் பணி தீவிரம்

ஆலந்தூர்: பரங்கிமலையில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நந்தம்பாக்கம், பரங்கிமலை, துளசிங்கபுரம், கணபதிபுரம் காலனி போன்ற ராணுவத்திற்கு சொந்தமான இடங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்பு அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதனை ஒட்டியே ஓடிஏ அமைத்துள்ளது. இந்த இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் தற்போது ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், துளசிங்கபுரத்தில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான இடங்களை அளக்கும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன் வருவாய் துறையினர் மூலம் நடந்து அடையாளம் இடப்பட்டது. இறுதிக் கட்டமாக, கணபதிபுரத்தில் நிலம் அளக்கும் பணி துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது. இதையடுத்து, எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் அளந்து அடையாள குறியீடுகள் அமைக்கும் பணி இன்று நடக்க உள்ளது.

Related Stories: