ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சி..!!

ஈரோடு: ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை வலுக்கட்டாயமாக எடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அந்த சிறுமியின் தாய் இந்திராணி, வளர்ப்பு தந்தை மற்றும் பெண் புரோக்கர் மாலதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தனது வளர்ப்பு தந்தை மூலம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாலும், பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் இவருக்கு வலுக்கட்டாயமாக கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளதாலும் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். யாரிடமும் சரியாக பேசாமல் தனக்கு ஏற்பட்ட நிலையை கருதி அமைதியாக இருந்து வந்தார்.

இந்த வழக்கு விசாரணை நாளை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பெற்ற தாயே தனது வாழ்க்கையை சீரழித்ததால் மனம் உடைந்த சிறுமி காப்பகத்தில் கழிவறையை சுத்தம் செய்யும் கிருமி நாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவர் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு நியாயம் கிடைக்க சட்டப்போராட்டம் நடந்து வரும் நிலையில் சிறுமி உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: