நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

சென்னை: நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு, கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக பல மாதங்களாக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நுழையீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் நேற்று உயிரிழந்தார். மாற்று நுரையீரல் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் வித்யாசாகரின் உடல்நிலை மோசமடைந்து, அவரது உயிர் பிரிந்துள்ளது.

இந்த துயரம் மீனாவின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமா உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனா அவரின் மகள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது ஆறுதல் செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். நேரில் சென்றும் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்ற ரஜினிகாந்த், மீனாவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். நடிகை குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சரத்குமார், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று பிற்பகல் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Related Stories: