இதுவரை இல்லாத அளவுக்கு சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு: மோசமான வானிலை காரணம்

டேராடூன்: இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2 மாத யாத்திரையில் 2.5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பக்தர்கள் அதிகப்படியாக உயிரிழந்துள்ளனர். கடந்த 26ம் தேதி கணக்கெடுப்பின்படி, 203 பேர் யாத்திரையின் போது இறந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத்தில் 97 பேரும், பத்ரிநாத்தில் 51 பேரும், யமுனோத்திரியில் 42 பேரும், கங்கோத்ரியில் 13 பேரும் இறந்துள்ளனர். பெரும்பாலானோர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 2019ல் 90 பேரும், 2018ல் 102 பேரும், 2017ல் 112 பேரும் யாத்திரையின் போது இறந்துள்ளனர். மிக மோசமான வானிலையே உயிரிழப்புக்கு காரணம் என்று அம்மாநில அமைச்சர் தன் சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

Related Stories: