அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்

மிசவுரி: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சிகாகோ நோக்கி, 8 பெட்டிகள் கொண்ட ஆம்டிரக் ரயில் சென்று கொண்டிருந்தது. ரயிலில் 243 பயணிகள் மற்றும் 12 ரெயில்வே ஊழியர்கள் இருந்தனர். மிசவுரி நகரில் உள்ள மென்டன் என்ற பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த ஒரு லாரி, ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளது. அப்பகுதியில், அபாய எச்சரிக்கை அம்சங்கள் எதுவும் இல்லை. அதனால் லாரி ரயில்வே கிராசிங்கை கடந்தபோது, அதன் மீது ஆம்டிரக் ரயில் மோதியது.

இதில் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் ரயிலில் இருந்த 2 பேர் மற்றும் லாரியில் இருந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்து ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவசரகால அதிகாரிகளும் பயணிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: