கடலூரில் சாலையோரம் நின்றவர்கள் மீது வேகமாக மோதிய கார்: இருவர் உயிரிழப்பு

கடலூர்: சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில், இளைஞர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஏ.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாமிதுரை. இவரது மகன் வீரமணி (36). இதேபகுதியை சேர்ந்த செல்லவேல் என்பவரது மகன் ராகுல்காந்தி (30). இருவரும் கூலி தொழிலாளிகளாக இருந்துள்ளனர். இவர்கள் விருத்தாசலம் – வேப்பூர் சாலை, விளாங்காட்டூர் பழத்தோட்டம் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது விருத்தாசலம் – வேப்பூர் நோக்கி சென்ற போர்டு பியாஸ்டா கார், இருவர் மீதும் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராகுல்காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாாயமடைந்த வீரமணி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: