நகராட்சி தலைவர் பதவி அதிமுக கவுன்சிலர் ராஜினாமா

துவரங்குறிச்சி: மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை அதிமுக கவுன்சிலர் நேற்று ராஜினமா செய்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில், 11 வார்டு உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள அதிமுக 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் சுதா நகரமன்ற தலைவரானார். துணைத் தலைவர், குழு உறுப்பினர்கள் தேர்தல்களை திமுக புறக்கணித்ததால் எந்த தேர்தலும் நடைபெறாத நிலையில் நகர்மன்ற கூட்டமும் நடைபெறவில்லை. கடந்த 3 மாதங்களாக இதேநிலை நீடித்து வந்த நிலையில், நேற்று தனது நகரமன்ற தலைவர் பதவியை சுதா திடீரென ராஜினமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சியாமளாவிடம் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கடிதத்தில் சுதா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: