ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஏலகிரியில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்-மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுப்பு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து சென்றது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நேற்று வார விடுமுறை என்பதால் கர்நாடகம், ஆந்திரா, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்கள் மூலமாகவும், பேருந்துகளிலும் குடும்பத்துடன் ஏலகிரி மலையில் குவிந்தனர்.

மேலும் இங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட அரசு பொழுதுபோக்கு கூடங்களிலும், தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன் பல்வேறு இடங்களை கண்டு களித்தும்  மகிழ்ந்தனர். குறிப்பாக இங்குள்ள படகுத்துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்தும் சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகளை அமர வைத்து விளையாடியும், தனியார் பொழுதுபோக்கு கூடங்களான சிறிய தொட்டியில் சிறுவர்களுக்கான படகில் போட்டிங் செய்தும், படகுத்துறை அருகே உள்ள வைல்டு வேவ்ஸ் தீம்  பார்க்கில் செயற்கை நீர்வீழ்ச்சி அருவியில் குளித்தும், நீச்சல் அடித்தும் ஆனந்த குளியல் போட்டு உற்சாகமடைந்தனர்.

மேலும் பேர்ட்ஸ் பார்க், இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தனர். வார விடுமுறையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்ததால் ஏலகிரி மலை கோலாகலமாக காட்சியளித்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்கள் மூலம் மலை சாலையை கடக்கும்போது சாலைகளில் ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து வந்தது. இதனால் பார்வையாளர்களுக்கு வாகனங்களின் அணிவகுப்பு கண்களுக்கு விருந்தாக காட்சி அளித்தது.

மேலும் சுற்றுலா தலத்தில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களின் நடமாட்டத்தையும் கண்காணிக்க ஏலகிரி மலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: