காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்-பணிகளை விரைந்து முடிக்கவும் மக்கள் கோரிக்கை

காவேரிப்பாக்கம் : காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளகேட் பகுதியிலிருந்து காவேரிபாக்கம் அடுத்த வாலாஜா டோல்கேட் பகுதிவரை சுமார் 37- கீலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் 6 வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த ஒரு வருடத்திற்கு  முன்பு தொடங்கப்பட்டன. இதனால் சாலையின் ஓரங்களில் இருந்த மரங்கள் மற்றும் முட்புதர்கள், வீடுகள், கடைகள், உள்ளிட்டவைகள்  அகற்றப்பட்டன.

ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழிச்சாலை பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே  சில மாதங்களுக்கு முன்பு  தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொது மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் இப்பகுதியில் விபத்துக்கள் நடைப்பெறாமல் இருக்க,  மேம்பாலம் பணிகள் விரைவாக தொடங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி  பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: