புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், 8 ஒப்பந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகப் பேருந்துகள் செல்லும் வழித்தடத்தில் கடந்த சில மாதமாக டைமிங் பிரச்சனை தலைதூக்கியது. PRTC ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியதாக கூறி, அதனை கண்டித்து நேற்று முதல் PRTC ஓட்டுனர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கினர்.

இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றிய 5 ஓட்டுனர்கள், 3 நடத்துநர்களை பணிநீக்கம் செய்து போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் உள்ளூர் பேருந்துகள் மற்றும் சென்னை, மாகி, திருப்பதி உள்ளிட்ட வெளியூர் பேருந்துகளும் இயங்கவில்லை. 2-வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தால் 9 லட்சம் ரூபாய் PRTC க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  

Related Stories: