பரமக்குடி வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகளை துணை இயக்குனர் ஆய்வு

பரமக்குடி: பரமக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை வேளாண்மை துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா ஆய்வு செய்தார். பரமக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில்,  மேலாய்குடி கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் தரிசு நில தொகுப்பில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக குழாய்க்கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை வேளாண்மை துணை இயக்குனர் ஷேக் அப்துல்லா (மா.தி) நேரில் ஆய்வு செய்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி விவசாயிகளுடன் எடுத்துரைத்தார். ஆய்வின்போது, பரமக்குடி வட்டார வேளாண்மை அலுவலர் பாலமுருகன், துணை வேளாண்மை அலுவலர் சுருளி வேலு, உதவி வேளாண்மை அலுவலர்கள் அங்காள ஈஸ்வரி, சக்தி மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: