புதுவை, காரைக்காலில் பள்ளிகள் இன்று திறப்பு

புதுச்சேரி: புதுவையில் பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியானது. இதையடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 10ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பள்ளிகள் இன்று (ஜூன் 23) முதல் திறக்கப்படுகின்றன. பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரூ, கடலூரில் இருந்து புத்தகங்கள் நேற்று புதுச்சேரி வந்தடைந்தன. உடனடியாக அவை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் மாணவர் சிறப்பு பேருந்துகளை மீண்டும் இயக்குவது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதனிடையே பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிக்கப்பட்டு, ஜூலை 11ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

Related Stories: