ரூ.34,615 கோடி கடன் மோசடி டிஎச்எப்எல் முன்னாள் சிஇஓ, இயக்குநர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: யூனியன் வங்கியில் ரூ.34,615 கோடி பெற்று கடன் மோசடியில் செய்த வழக்கில் டிஎச்எப்எல் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி, இயக்குநர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த திவான் ஹவுசிங் பைனான்ஸ் கார்பரேஷன் லிமிடெட் (டிஎச்எப்எல்) நிறுவனத்துக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி கடன் வழங்கியது. இதற்கு கைமாறாக, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர், அவரது மனைவி, 3 மகள்கள் வங்கி கணக்குகளில் ரூ.600 கோடி பணம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக கபில் வதாவன், தீரஜ் வதாவன் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ அவர்களை கடந்த 2020 ஏப்ரலில் கைது செய்தது. இந்நிலையில், யூனியன் வங்கியில் ரூ.34,615 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஎச்எப்எல் முன்னாள் தலைமை நிர்வாகி கபில் வதாவன், இயக்குநர் தீரஜ் வதாவன் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. மேலும், இந்த கடன் தொகை பெற உதவியதாக 6 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீதும் யூனியன் வங்கி கடந்த பிப்ரவரி மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. இதுவே, சிபிஐ விசாரிக்கும் அதிகபட்ச வங்கி கடன் மோசடி வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: