பொன்னேரி- செங்குன்றத்துக்கு அரசுப்பேருந்து இயக்கம்: அமைச்சர் ஆவடி நாசர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

பொன்னேரி: பொன்னேரியில் இருந்து செங்குன்றம் வரை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், எம்எல்ஏக்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திறகு உட்பட்டது மாதவரம்.ஆமூர், மாளிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள் வழியாக (தடம் எண்- டி.41) அரசுப்பேருந்து மாதவரம், ஆமூர், மாளிவாக்கம், செங்குன்றம் வழியாக இயக்கப்பட்டு வந்தது சமீபத்தில் இப்பேருந்து இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரசு பேருந்து (தடம் எண்-41) நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

பொன்னேரி தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். புறப்பட்ட பேருந்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மூணு கிலோ மீட்டர் தூரம் பொது மக்களுடன் பேருந்தில் பயணம் செய்தனர். அவைத்தலைவர் பகலவன் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன். ஒன்றிய செயலாளர்கள் சோழவரம் செல்வசேகரன், வல்லூர் ரமேஷ் ராஜ், பொன்னேரி சுகுமாரன், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள். ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள். கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: