தமிழகத்தில் காடுகளுக்கு வெளியே மரம் வளர்க்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி மற்றும் இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் இணைந்து நிலையான காடுகள் மற்றும் காலநிலை தழுவல் என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் காடுகளுக்கு வெளியே மரங்களை வளர்த்தல் என்ற தலைப்பின் கீழ் இருதரப்பும் ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்திட்டமானது தமிழ்நாடு, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், கேரள வன ஆராய்ச்சி நிலையம் மற்றும் கோவை ஜெம் இன்ஜினியரிங் உள்ளிட்ட இரு நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன், கல்லூரி துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள், கூட்டமைப்பு நிர்வாகிகள், எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்இதன்பின்னர் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இத்திட்டத்தை ஆராய்ச்சி செய்து வெளியே கொண்டு செல்வதற்காக யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்து நிதி வழங்கியுள்ளனர்.இத்திட்டத்தை விரிவு படுத்த ரூ.5 கோடி வழங்க உள்ளனர்.

மனித- யானை மோதலை தடுக்க யானைகளுக்கு பிடித்த 5 வகையான ஒரு லட்சம் மரக்கன்றுகளை வனப்பகுதிக்குள் நட்டு யானைகள் ஊருக்குள் புகாவண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். யானைகளுக்கு தேவையான உணவை வனப்பகுதிக்குள்ளேயே வளர்த்தால் யானைகள் ஊருக்குள் வராது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் உழவர் தின விழா மிகப்பெரிய அளவில் நடத்தப்படும். அப்போது புதிய பயிர்களை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: