தா.பழூர் பகுதியில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா. பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் தமிழக அரசு சார்பில் நடந்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தா.பழூர் சுற்று பகுதிகளான நீர்வள, நில வள திட்டம் கீழ் அருள்மொழி, புரந்தான், இடங்கண்ணி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

இதில் அருள்மொழி, புரந்தான் கிராமத்தில் உடையார்பாளையம் உதவி இயக்குனர் தலைமையில், கால்நடை மருத்துவர் வெற்றிவடிவேலன், பிரசாந்த், கால்நடை உதவியாளர்கள் சுமதி, கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் இடங்கண்ணி கிராமத்தில் வடவார் தலைப்பு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நீர்வள நிலவள திட்டம் மூலம் மலடு நீக்க சிகிச்சை முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை அளித்தல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.இம்முகாம் கோடாலிகருப்பூர் கால்நடை உதவி மருத்துவர் வாசுகி மற்றும் வடவார் கால்நடை உதவி மருத்துவர் அபிநயா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மகாலட்சுமி ஆகிய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

Related Stories: