சாலை விரிவாக்கப் பணிக்காக அய்யனார் கோயில் இடிப்பு-நிவாரணம் வழங்க கோரிக்கை

பண்ருட்டி :  பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் ஸ்ரீபெயரிடும் அய்யனார்  கோயில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள இந்த கோயில் மிகவும்  பிரசித்தி பெற்றது. தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக பல்வேறு  கட்டிடங்களை இடித்து வருகின்றனர். இதில் இந்த கோயிலுக்கு சொந்தமான முகப்பு  வாயில், சாமி சிலைகள் கட்டிடம் அகற்றுவதற்கும், புனரமைப்பிற்கும் ரூ.64 லட்சம்  தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஒதுக்கீடு செய்து இருப்பதாக  தெரிகிறது.

ஆனால் எவ்வித இழப்பீடு தொகையும் வழங்காமல் தனி வட்டாட்சியர்  கண்ணுசாமி, தனிவருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கொண்ட குழுவினர்  ஸ்ரீபெயரிடும் அய்யனார் அறக்கட்டளை நிர்வாகிகள் எவருக்கும் முன்  அறிவிப்பு செய்யாமல் கோயிலை இடித்துவிட்டனர். இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகி மணிகண்ணன் முதல்வருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், எங்களது கிராம  பாரமரிய கோயில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதை தற்போது சாலை  விரிவாக்கம் என்ற பெயரில் முன் அறிவிப்பு செய்யலாமல்  தேசிய நெடுஞ்சாலை துறையினர் இடித்துவிட்டனர். இழப்பீடு தொகை ஒதுக்கீடு  செய்தும் வழங்கவில்லை. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறி உள்ளார்.

Related Stories: