வரும் 26ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுக செயல்வீரர்கள் கூட்டம் 26ம் தேதி முதல் நடக்கிறது. அமமுகவின் மாவட்ட வாரியான செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் கூட்டம், பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர், சேலம், தருமபுரி, மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கீழ்காணும் விவரப்படி செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமை நிர்வாகிகள், அமைப்புச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர,

பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் என  அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டங்களானது 26.06.2022ல் ஸ்ரீ வள்ளி பேலஸ், அயப்பாக்கம், திருவள்ளூர்; 3.7.2022 பொன்னாக்கவுண்டர் திருமண மண்டபம், நெய்காரப்பட்டி, 4.7.2022 வன்னியர் திருமண மண்டபம், நான்குரோடு அருகில், தருமபுரி; 13.7.2022 கிங் பேலஸ் திருமண மண்டபம், கேணிக்கரை, மயிலாடுதுறை; 14.7.2022 காவேரி திருமண மண்டபம், தவுத்தாய்குளம், அரியலூர்’ ஆகிய இடங்களில் நடக்கிறது.

Related Stories: