கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி; ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக செல்லவுள்ளோம்.! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில்,அதனை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: “தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இதுவரை 9.16 லட்சம் புகார்கள் பெறப்பட்டு உள்ளன.

சென்னையில் தொடங்கப்பட்ட மின்னகம் மூலம் அப்புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ஒரே நேரத்தில் ஒரு லட்சம் அழைப்புகள் வந்தாலும், அதை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி:” கடலில் காற்றாலை தயாரிக்கும் பணி தொடர்பாக 5 நாள் அரசு முறை  பயணமாக இன்று ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக செல்லவுள்ளோம்”, என கூறினார். மேலும் தமிழ்நாடு மின்வாரியத்தில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: