நீர்வரத்து 11,000 கனஅடியாக அதிகரிப்பு ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் சவாரிக்கு தடை

பென்னாகரம்: கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளில்வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், காவிரியில் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 5,661 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 5,894 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 110.77 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 110.20 அடியானது.

Related Stories: