ஏரிகள் தூர்வாரும் பணி: காஞ்சி கலெக்டர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காரணிபேட்டை,  பெரிய தாங்கல் ஏரிகளை ரூ.16 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை  காஞ்சிபுரம் கலெக்டர் துவக்கிவைத்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடிகால் பகுதியில் உள்ள காரணிபேட்டை ஏரி மற்றும் பெரிய தாங்கல் ஏரியை அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் தூர்வாரி புரனமைக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணியை  காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்:

இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை மூலம் ரூ.16 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு பணிகளால் ஏரிகள் தூர்வாரி, கரைகள் பலப்படுத்தப்படும். வரத்து வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு நீர்பிடிப்பு பகுதி மற்றும் நீர்த்தேக்கப்பகுதிகள் ஆழப்படுத்தப்படும். இதனால் நீர்த்தேக்கம் அதிகரித்து நிலத்தடிநீர் மட்டம் உயரும். மேலும் வெள்ள தடுப்பு, வறட்சி தடுப்பு, பல்லுயிர் இனப்பெருக்கம் போன்றவற்றிற்கும் வழிவகுக்கும் என்றார்.நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பவானி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: