மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள்; நெடுவாசலில் நெகிழ்ச்சி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மங்களநாயகி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து சென்று வாழ்த்து தெரிவித்தது மதம் நல்லிகத்தை போற்றியுள்ளன. வடக்காடு அருகே நெடுவாசல் கிராமத்தில் பழமை வாய்ந்த மங்களநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் உள்ள பல்வேறு கிராம மக்கள் நாடிய குதிரை அடங்கல், செண்டை மேளங்கள் முழங்க நெடுவாசல் கிராமத்தில் உள்ள அவ்கோயிலுக்கு சீர்கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதம் நல்லினக்கதை போற்றும் விதமாக ஆவணம் மற்றும், காசிம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ, பழம், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தட்டுகளை கையில் ஏந்தியபடி நெடுவாசல் கோவிலுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக கொண்டுவந்தனர். சீர்வரிசை உடன் வந்த இஸ்லாமியர்களை நெடுவாசல் கிராம மக்கள் மற்றும் விழாக்கள் குழு சார்பில் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். பின்னர் இஸ்லாமியர்களை கிராம மக்கள் கோயிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் இஸ்லாமியர்கள் கொண்டுவந்த சீர்வரிசை மற்றும் பணத்தை விழா குழுவினர் பெற்று கொண்டு இஸ்லாமியர்களுக்கு  தங்கள் நன்றியை தெரிவித்தனர்.           

Related Stories: