அங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: அங்கம்பாக்கம் கிராமத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளி சார்பில், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கக்கோரி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இதில், தலைமையாசிரியர் தணிகைஅரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி, பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயசுதா முருகேசன் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் சேகர், அரசு பள்ளியில் படிப்பதால் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக அரசு வழங்கும் சிறப்பு சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில், பள்ளி ஆசிரியர்கள் குளோரி பாத்திமா, லதா, பொற்கொடி, கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் பார்த்தசாரதி, மஞ்சுபிரியா, நந்தினி, முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர் பேரணியில் பங்கேற்றனர்.முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், பதாகைகள் ஏந்தி அரசுப்பள்ளிகளில் உள்ள சிறப்புகள் அடங்கிய துண்டு சீட்டு கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது.

Related Stories: