பண்ருட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு மழையில் நனைந்த எள் வரத்தால் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

பண்ருட்டி: பண்ருட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலூர், கண்டரக்கோட்டை, பெரும்பாக்கம், குவாகம், மணலூர், சோமாசிபாளையம், ஒரையூர், மடப்பட்டு என நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி பயிராக விவசாயிகள் பொட்டு, எட்டுபட்டை, சிவப்பு, கருப்பு  எள் ரகங்களை பயிரிட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் எள் அறுவடைக் காலமான தற்போது பண்ருட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு எள் வரத்து குறைவு என்பதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.  கடந்த வருடம் பண்ருட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ஒரு நாளைக்கு 100 லிருந்து 150 மூட்டை வரை விவசாயிகளிடமிருந்து எள் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த வருடம் ஒரு நாளைக்கு 30 மூட்டை தான் வருகிறது. கடந்த வருடம் ஒரு மூட்டை ரூ.11 ஆயிரத்துக்கு விலைபோன எள், இந்த வருடம் ரூ. 8.300 க்குத்தான் விலை போகிறது.

அத்தோடு மழையில் எள்  நனைந்து தரம் குறைந்து விடுகிறது. இன்னும் பல கிராமங்களில் இந்த மழையினால் அறுவடை செய்து அவற்றை உலர்த்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாகவும் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories: