பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வரை பேச அனுமதிக்காதது மகாராஷ்டிராவுக்கு செய்த அவமதிப்பு: எம்பி சுப்ரியா சூலே காட்டம்

மும்பை: மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் அஜித் பவாரை பேச அனுமதிக்காதது, மாநிலத்தை அவமதிக்கும் செயலாகும் என்று எம்பி சுப்ரியா சூலே குற்றம்சாட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைக்கப்பட்ட கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வரும், ேதசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் அஜித் பவாரும் பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் உரையாற்றினார். ஆனால் துணை முதல்வர் அஜித் பவாரை பேச அனுமதிக்கவில்லை.

பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வரை பேச அனுமதிக்காத விவகாரம், மாநிலத்தில் அரசியல் புயலை கிளப்பி உள்ளது. இதுகுறித்து அமராவதியில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான சுப்ரியா சூலே கூறுகையில், ‘அஜித் பவார் துணை முதல்வராகவும், மாவட்டப் பொறுப்பு அமைச்சராகவும் இருப்பதால், கோயில் நிகழ்ச்சியில் அவரை பேச அனுமதிக்குமாறு பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அதற்கு பிரதமர் அலுவலகம் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. துணை முதல்வர் பேசுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. பட்னாவிசை பேச அனுமதிப்பது அவர்களது தனிப்பட்ட விஷயம்; இந்த நிகழ்ச்சியில் அஜித் பவாரை பேச அனுமதிக்காதது மிகவும் வேதனையான விஷயமாகும். இது, மகாராஷ்டிராவை அவமதிக்கும் செயலாகும்’ என்று தெரிவித்தார்.

Related Stories: