மேலக்கழனி ஊராட்சியில் ரூ60 லட்சம் மதிப்பீட்டில் விதை சுத்திகரிப்பு நிலையம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மேலக்கழனியில் கொசஸ்தலை கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் ரூ60 லட்சம் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.கும்மிடிப்பூண்டி அடுத்த மேலக்கழனி கிராமத்தில் கொசஸ்தலை கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் தமிழக அரசின் நிதி உதவியில் ஒரு நாளைக்கு 6-10 மெகா டன் விதைகளை சுத்திகரிப்பு செய்யும் விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஊராட்சி தலைவர் பத்மஜா கவுரிசங்கர், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன் ஆகியோர் வரவேற்றனர். இதில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி ராகவரெட்டிமேடு ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன், நகர செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு விதை சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கி வைத்தார்.

அப்போது இந்த விதை சுத்திகரிப்பு நிறுவனத்தின் செயல்பாடு குறித்து வேளாண்மை துறை இணை இயக்குனர் எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண் துறை துணை இயக்குனர் எபினேசர், வேளாண் வணிக துறை துணை இயக்குனர் இ.ராஜேஷ்வரி, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை வேளாண் உதவி இயக்குனர் ஜீவராணி ஆகியோர் எடுத்துரைத்தனர்.விழாவில் பேசிய எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், `இந்த விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 6 குழுக்களில் 600 பேர், மீஞ்சூரை சேர்ந்த 2 குழுக்களில் 200 பேர் மற்றும் புழல், சோழவரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 குழுக்களில் 400 பேர் என 1000 விவசாயிகள் பயன்பெற முடியும். மேலும் இங்கு ஒரு நாளைக்கு 6-10 மெட்ரிக் விதை சுத்திரிப்பு செய்யவும், 1000 மெட்ரிக் டன் விதை இங்கு பராமரிக்க இங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர்கள் முபாரக், அமுதா, பத்மதாபன், உதவி வேளாண் அலுவலர்கள் வி.சாரதி, அசோக்குமார், இளங்கோ, பாஸ்கர், சுஜிதாமேரி, ஏழுமலை, கொசஸ்தலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்கள் மணி, பாலாஜி, சரவணன், ரமேஷ், மது, சுதாகர், பழனி, இந்துமதி, கோபி, குமாரசாமி, ஆறுமுகம் ஆகியோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.

Related Stories: