உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுடன் சண்டையிட்ட 3 பேருக்கு மரண தண்டனை: மேற்கத்திய நாடுகள் கண்டனம்

பக்மத்: உக்ரைனுக்காக போரிட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற முடியாத நிலையில் மரியுபோல், கெர்சன்,  உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் மரியுபோலில் ஒவ்வொரு கட்டிட இடுபாடுகளில் இருந்தும் 100 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.  இந்நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகளிடம் இங்கிலாந்தை சேர்ந்த து ஐடன் அஸ்லின், ஷான் பின்னெர், மொராக்கோவை சேர்ந்த சவுதின் பிராகிம் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். அவர்கள் மீது உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் கூலிப்படையினர் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறி அவர்கள் மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இவர்களில் இங்கிலாந்தை சேர்ந்த இருவரும் உக்ரைன் படையில் பணியாற்றியவர்கள் என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். அதே போல், சவுதினின் தந்தை அவர் உக்ரேனிய குடியுரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தண்டனை விதிக்கப்பட்ட முதல் வெளிநாட்டுப் போராளிகள் இவர்களாவர். இதனால் இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: