கரூர் குளித்தலை அருகே பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா: பக்தர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்து வழிபாடு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பகவதி அம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவையொட்டி பக்தர்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொண்டு விநோத நிகழ்வு நடைபெற்றது. மேட்டு மகாதானபுரத்தில் உள்ள ஆலயத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 22ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன், வைகாசி திருவிழா தொடங்கியது. படையில் வருதல், துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீராஜராஜேஸ்வரி  அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முளைப்பாரி எடுப்பது நேற்று நடைபெற்றது. காப்புக்கட்டி விரதம் இருந்த சிறுமிகள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை ஏந்திச் சென்று நகரின் மையப்பகுதியில் அமைத்துள்ள தெப்பக்குளத்தில் கரைத்தனர்.       

Related Stories: