பூந்தமல்லியில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

பூந்தமல்லி: திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி நகர திமுகசார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பூந்தமல்லி குமணன்சாவடியில் நகர செயலாளர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தமிழ்நாடு பாடநூல்கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு லியோனி பேசியதாவது: அறிஞர் அண்ணாவின்குரல் 50 சதவீதம், கருணாநிதியின் குரல் 50 சதவீதம். இவை இரண்டும் சேர்ந்த ஒரே குரல்தான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் பாஜ வந்தாலும், தமிழகத்தில் திமுகவை எந்த கொம்பனாலும் தொடமுடியாது. திராவிட மாடல் ஆட்சி நல்லதை உருவாக்கும். எதையும் கெடுக்காது, யாரையும் பிரிக்காது. மற்றவர்களை உருவாக்கும். யாரையும் சிதைக்காது.  திமுக ஆட்சியில்தான் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத்தலைவர், ஸ்ரீதரன், மாவட்ட பிரதிநிதி சுதாகர், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அன்பழகன், ஜெரால்டு, தேசிங்கு, ஜே.ரமேஷ், காயத்திரிஸ்ரீதரன், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: