பள்ளிப்பட்டு அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு  அருகே தமிழக ஆந்திர எல்லையில்  அமைந்துள்ளது  புண்ணியம் கிராமம். இங்கு,  சிறப்பு பெற்ற  குந்தியம்மன்  மூலவர் மற்றும் உற்சவர் ஆலயங்களுக்கு ராஜகோபுரம், விமான கோபுரம் உட்பட  திருப்பணிகள் நடைபெற்று.கடந்த, மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக  நடந்தது. விழாவை யொட்டி  ஆலயம் மற்றும் கிராம வீதிகள்  வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆலய வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு  ஹோம பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று காலை  மஹா சங்கல்பம்,  பூர்ணஹுதி பூஜைகளை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க  கலசங்கள் புறப்பாடு நடைபெற்று. இதனை தொடர்ந்து, ராஜகோபுரம், விமான கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயில் சுற்றி கூடியிருந்த   பெரும் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம் சக்தி முழக்கங்களுடன்  வழிபட்டனர். இதனை அடுத்து மூலவர்  ஆலய  கோபுர கலசத்திற்கு கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதில், வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் குங்குமம் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: