பாப்பான்குளத்தில் சுடுகாட்டு சாலையை சீரமைக்க கோரிக்கை

கடையம் : கடையம் யூனியனுக்கு உட்பட்ட பாப்பான்குளம் ஊராட்சியில் பல்வேறு தரப்பினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களது ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்குள் மிகவும் சிரமபட்டுதான் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அந்தளவிற்கு இந்த சாலை ஆங்காங்கே பெரிய குழிகளும் உள்ளன.  மழைக்காலங்களில் உடலைத் தூக்கிச் செல்லும்போது வழுக்கி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நேற்று ஆய்வுக்கு வந்த மாவட்ட கலெக்ரிடம் புகார் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: