புதுக்கோட்டை மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா: தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்த அமைச்சர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 9 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டம் என்பதால் அந்த பகுதியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர்.

மா,பலா, வாழை என முக்கனிகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மன் வீற்றிருக்க மங்கள இசை முழங்க கோவிலின் 4 வீதிகளையும் சுற்றி வைரத்தேர் வளம் வந்தது. இந்த திருவிழாவில் கலந்து கொண்ட தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு செண்தை மேளம் முழங்க அந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல் கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்து இந்த தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பாரம்பரிய முறைப்படி குதிரையில் வந்தவர்களை மாங்காடு கிராம மக்கள் மேளதாளங்களுடன் அழைத்துச் சென்று தேரோட்ட திருவிழாவை வடம் பிடித்து தொடங்கிய நிகழ்வு காண்போரை வியக்கவைத்தது.       

Related Stories: