நிரந்தர பொதுச்செயலாளராக வாழ்த்து ஓபிஎஸ் வீடு அருகே இபிஎஸ் ஆதரவு போஸ்டர்: பெரியகுளத்தில் பரபரப்பு

பெரியகுளம்: பெரியகுளத்தில் ஓபிஎஸ் வீடு அருகிலேயே எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமை குறித்த பிரச்னை அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டர்கள் பெரியகுளம் தென்கரை பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வீடு செல்லும் சாலை, தேனி எம்.பி. ரவீந்திரநாத் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘‘விரைவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக பதவி ஏற்க இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஓபிஎஸ் இல்லம் அருகிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரியகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: