சேலம் மாவட்டத்தில் உள்ள கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரியகோயில் நீர்தேக்கத்திலிருந்து அணையின் பழைய பாசனப் பகுதிகளுக்கு 10.06.2022 அன்று  காலை 8 மணி முதல் அணையின் வலது மற்றும் இடது தலைமை மதகுகளின் (RMC, LMC Head sluices) மூலம் 40 கனஅடி/வினாடி என  நாளொன்றுக்கு 3.45 மில்லியன் கன அடி வீதம் 23 நாட்களுக்கு 79.35 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.  

மேலும் புதிய பாசனப் பகுதிகளுக்கு 03.07.2022 அன்று காலை 8 மணி முதல் அணையின் வலது புற கால்வாயின் மூலம் 15 கனஅடி / வினாடி மற்றும் இடதுபுற கால்வாயின் மூலம் 15 கனஅடி / வினாடி என மொத்தம் 30 கனஅடி / வினாடி வீதம் நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கன அடி வீதம் 20 நாட்களுக்கு 51.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் சிறப்பு நனைப்பாக (special wetting) தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்திலுள்ள பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் மற்றும் இடையப்பட்டி ஆகிய கிராமத்திலுள்ள பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: