முத்துநகர் பூங்காவை எம்.பி. கனிமொழி திறந்துவைத்தார்: மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு செல்லும் சாய்வு தள வசதி அமைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 4.30 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பிரமாண்ட பூங்காவை எம்.பி. கனிமொழி திறந்து வைத்தார். தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முத்துநகர் பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை, செல்பி ரசிகர்களுக்காக செல்பி பாய்ன்ட், சிறுவர்களை குதூகளிக்கும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்படுயுள்ளது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகளும் கடலுக்கு சென்று கடல் நீரில் கால் நனைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தள வசதி மாற்றுத்திறனாளிகளை குதூகல படுத்தியுள்ளது. இந்த பூங்காவை திறந்து வாய்த்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மாற்றுத்திறனாளிகளை கடலுக்கு அழைத்து சென்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பூங்காவை பொதுமக்கள் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட  கனிமொழி வாரம் தோறும் இங்கு கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யுமாறும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தினார். 

Related Stories: