ஸ்பெல் பீ போட்டியில் இந்திய மாணவி வெற்றி

ஹூஸ்டன்:  அமெரிக்காவில் ‘ஸ்பெல் பீ’ போட்டிகள் கடந்த 1925ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு நடத்தப்படவில்லை. காணொலி மூலமாக நடத்தப்பட்ட 2021ம் ஆண்டு போட்டியில் 209 பேர் பங்கேற்றனர்.இந்நிலையில், 2022ம் ஆண்டிற்கான ஸ்பெல் பீ போட்டிகள் நேற்று நடந்தன. இதில், டெக்சாசில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8ம் வகுப்பு ஹரிணி லோகன், 26 வார்த்தைகளில் 21க்கு சரியான பதிலளித்து பட்டம் வென்றார். ரூ38.80 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்.டென்வரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 வயது விக்ரம் ராஜூ 19 வார்த்தைகளுக்கு 15க்கு சரியான பதிலளித்து 2வது இடத்தை பிடித்தார். 13 வயது நிரம்பிய டெக்சாஸ் மாணவன் விகான் சிபல்,  வாஷிங்டனை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் சகார்ஷ் உப்பலா முறையே 3, 4வது இடங்களை பிடித்தனர்.

Related Stories: