சம்பாவத் தொகுதி தேர்தலில் வெற்றி ... உத்தராகண்ட் முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டார் புஷ்கர் சிங் தாமி!!

டேராடூன்: சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த  சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட முதல்வர்  வேட்பாளரான புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். எனினும் தாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பொறுப்பேற்றார். ஆறு மாதங்களுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக ஏப்ரல் 21ம் தேதி சம்பவாத் தொகுதி பாஜ எம்எல்ஏ  கைலாஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து சம்பவாத் தொகுதியில் கடந்த மே 31ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து முதல்வராக நீடிக்க முடியும் என்ற கேள்விக்குறி எழுந்தது.  முதல்வா் புஷ்கா் சிங் தாமி, காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவா் நிா்மலா கெடோரி, சமாஜவாதி சாா்பில் மனோஜ் குமாா் பட், சுயேச்சை வேட்பாளா் ஹிமான்ஷு கட்கோடி ஆகியோா் தேர்தலில் போட்டியிட்டனர். தோ்தல் களத்தில் 4 போ் இருந்தாலும் பாஜக, காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.

இந்த நிலையில் மே 31ம் தேதி சம்பவாத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி சம்பாவத் தொகுதியில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் புஷ்கர் சிங் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவா் நிா்மலா கெடோரியை விட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று புஷ்கர் சிங் முதலமைச்சர் பதவியை தக்க வைத்து கொண்டார்.    

Related Stories: