தூத்துக்குடி வாழை சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு வாழை இலை, வாழை தார்களின் விலை உயர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி வாழை சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு வாழை இலை, வாழை தார்களின் விலை உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் சாகுபடியாகும் வாழை தார்கள், வாழை இலை தூத்துக்குடி வாழை சந்தை மூலமாக மாநிலம் முழுவதுமாக விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

வரத்து குறைவு மற்றும் வைகாசி மாதம் முகூர்த்த நாட்கள் தொடர்ந்து வருவதால் இந்த சந்தையில் வாழை இலை மற்றும் வாழை தார்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு வாழை இலை ரூ.5,000 வரை உயர்ந்துள்ளது.

இதேபோல் வாழை தார்களின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட கற்பூரவள்ளி வாழைத்தார் தற்போது ரூ.600-க்கு விற்பனையாகிறது. நாட்டு வாழைத்தார் ரூ.400-ல் இருந்து ரூ.700-க்கும், கோழிக்கூடு வாழைத்தார் ரூ.200-ல் இருந்து ரூ.400-க்கும் விற்பனையாகிறது.

Related Stories: