உக்ரைன் உடனான போர் எதிரொலி: 40 வயதிற்கு மேற்பட்டோரையும் ராணுவத்தில் சேர்க்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அனுமதி

மாஸ்கோ: ரஷ்யாவில், 40 வயதிற்கு மேற்பட்டோரையும் ராணுவத்தில் சேர்க்க அனுமதிக்கும் அரசாணைக்கு அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களே ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உச்சக்கட்ட வயது வரம்பு அகற்றப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது. இந்த போரில் இரு நாட்டு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எக்காரணம் கொண்டு உக்ரைனை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என்றும் ரஷ்யா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலாஸ்கி அறிவித்திருந்தார். மேலும் இப்போரில் ரஷ்யா இதுவரை 30 ஆயிரம் வீரர்கள் இழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ரஷ்யா தனது ராணுவத்தை பலப்படுத்தும் விதமாக இனி 40 வயதிற்கு மேல் ஆனாலும் தகுதியுள்ளவர்களாக இருந்தால் ராணுவத்தில் சேரலாம் என்று அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் மருத்துவர்கள், பொறியாளர்கள், தகவல் தொடர்பு நிபுணர்கள் என ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்களை ராணுவத்தில் சேர்க்க ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது.

Related Stories: